மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு முடிந்த பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்போது உரிய மரியாதையுடன் சடங்குகள் செய்யப்படுகின்றன.
ஆனால் ஆதரவற்றச் சடலங்களுக்கு எவ்விதச் சடங்குகளும் செய்யாமல் அரசு ஆம்புலன்ஸில் ஏற்றி சுடுகாட்டில் அரைகுறையாக அடக்கம் செய்யப்படுகின்றன. அவை சரிவர புதைக்கப்பட்ட காரணத்தால் நாய்கள் கடித்து சடலத்தை வெளியே இழுக்கும் அவலமும் நடைபெறுகிறது.
இறந்தவரை அடையாளம் காண இயலாத சூழலில் இதுபோன்ற அவலங்கள் நடைபெறுகின்றன. தற்போது சிம் கார்டுகளைப் பெறுவதற்கு ஆதார் எண் மற்றும் விவரங்கள் பெறப்படுகின்றன.