கரோனா தொற்று பேரிடர் காலத்தில், தன் மகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாயை உணவிற்கு கஷ்டப்பட்ட ஏழை மக்களுக்காகவழங்கிய மதுரையைச் சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி மோகனை, பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பாராட்டிப் பேசியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அவையால் அங்கீகரிக்கப்பட்ட யு.என்.ஏ.டி.ஏ.பி என்ற தொண்டு நிறுவனம், மோகனின் மகள் மாணவி நேத்ராவை உலக ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதுவராக அறிவித்து சிறப்பித்தது. மேலும், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் மாணவி நேத்ராவைப் பாராட்டினர்.