மதுரை பசுமலையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் இரும்புக் கடையொன்றில் வேலை பார்த்துவருகிறார். இவருடைய இரண்டரை வயது மகன் விக்னேஷ்வரன், குல்லியன் பாரி சின்ரோம் என்கிற அரியவகை தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மதுரை இராசாசி மருத்துவமனையில் சிறுவன் விக்னேஷ்வரன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சிகிச்சை 210 நாள்களுக்கு மேலாக அளிக்கப்பட்டது. மேலும், விலையுயர்ந்த மருந்துகள் கொடுக்கப்பட்டு, குழந்தைகள் நல மருத்துவர்களில் தீவிரக் கண்காணிப்பில் சிறுவன் தற்போது முற்றிலும் குணமாகியுள்ளார்.