மதுரை இராசாசி மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மின்வெட்டு இல்லாததால்தான் நோயாளிகள் உயிரிழந்ததாகவும், இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வந்தன.
இந்நிலையில் மதுரை இராசாசி மருத்துவமனையின் முதல்வர் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
மதுரை அரசு மருத்துவமனை டீன் வனிதா செய்தியாளர் சந்திப்பு அப்போது, "மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட அனைத்துத் துறை அலுவலர்களும் எப்போதும் தயாராக இருக்கின்றனர். மின்தடையால் ஐந்து பேர் உயிரிழக்கவில்லை, அவர்களின் உடல்நிலை ஏற்கனவே மோசமாக இருந்ததால்தான் அந்த இறப்பு ஏற்பட்டது.
மின்தடை ஏற்படாமல் இருந்தாலும், அந்த இறப்பு ஏற்பட்டிருக்கும். அது இயற்கையான மரணம்தான்" என்று விளக்கம் அளித்தார்.