மதுரை: பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என அம்மாவட்டம் முழுவதும் சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தோப்பூரில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன் தொடக்கமாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, 5 கோடி ரூபாய் செலவில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.
இந்நிலையில், கரோனா பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கட்டுமானப் பணிகள் தொய்வாக நடைபெற்று வந்தன. போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
மதுரையில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் இதற்கிடையே, பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்துக் கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என செல்பேசி எண்ணுடன் மதுரை மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட புகைப்படத்துடன் இந்த சுவெராட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர்கள்: திமுக பெண் தொண்டர் தற்கொலை முயற்சி!