நாடுமுழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதைத் தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உரிய ஆவணமில்லாத பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
பேருந்தில் இரண்டு லட்சம் ரூபாய் பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி! - Vadipatti
மதுரை: கோவையிலிருந்து மதுரைக்கு இன்று அதிகாலை வந்த அரசுப்பேருந்தில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட இரண்டு லட்சத்து 34 ஆயிரம் ரூபாயை தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான மலர்விழி தலைமையில் பறக்கும் படை குழுவினர் பறிமுதல்செய்தனர்.
இந்நிலையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தேர்தல் அதிகாரிகள், தாசில்தார் மலர்விழி தலைமையில் வாகனச் சோனையின்போது, இன்று அதிகாலை 5 மணியளவில் கோவையிலிருந்து, மதுரைக்கு வந்த அரசுப்பேருந்தைச் சோனை செய்தபோது, அதில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.2,34,000 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விசாரித்தில் பணத்தைக் கொண்டுவந்த நபர், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த முகைதீன் அப்பாஸ்(50) என்று தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்தை பறக்கும் படை குழுவினர் வாடிப்பட்டி தாலுகா அலுவலத்தில் ஒப்படைத்தனர். மேலும், இது குறித்து வாடிப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.