தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்ட ஆன்லைன்ல பாருங்க! - ஜல்லிக்கட்டு போட்டிகள்

மதுரை: பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆன்லைன் மூலமாக காண மதுரை மாவட்ட காவல் துறை ஏற்பாடு செய்துள்ளதுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

By

Published : Jan 13, 2021, 1:15 AM IST

மதுரை மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும் 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இவ்விரண்டு போட்டிகளையும் ஆன்லைன் மூலமாக கண்டுகளிக்கும் வகையில் மதுரை மாவட்ட காவல்துறை ஏற்பாடுகளை செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தற்போது கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், மதுரை மாவட்ட மக்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பாதுகாப்பான முறையில் மதுரை மாவட்ட காவல்துறையின் சமூக வலைதளங்கள் மூலமாக கண்டுகளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்

ABOUT THE AUTHOR

...view details