தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை பட்டாசு ஆலை விபத்து - உரிமையாளர் கைது - Crackers Factory accident

மதுரை, உசிலம்பட்டி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை கோர விபத்தில், ஆலை உரிமையாளர் அனுசியாவை கைது செய்த போலீசார், தலைமறைவான அனுசியாவின் கணவர் உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.

மதுரை பட்டாசு விபத்து
மதுரை பட்டாசு விபத்து

By

Published : Nov 11, 2022, 12:10 PM IST

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் இயங்கி வந்த VBM என்ற பட்டாசு தொழிற்சாலையில் நேற்று கோர விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 13க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

உயிரிழந்த அப்பாவி தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 5 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஆலை உரிமையாளர் அனுசியா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அனுசியாவின் கணவர் வெள்ளையப்பன், ஆலை மேலாளர் பாண்டி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:லண்டன் மாநாட்டில் தமிழ்நாடு சுற்றுல்லா துறை அரங்கு

ABOUT THE AUTHOR

...view details