தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்: வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு - மணல் திருட்டு

தூத்துக்குடியின் மொரப்பநாடு தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரி நடத்தப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்
சட்டவிரோத மணல் குவாரி விவகாரம்

By

Published : Nov 23, 2021, 9:07 AM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "தூத்துக்குடியின் முறப்பநாடு பகுதியின் அகரம் கிராமத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் சட்டவிரோத மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கழுகுப் பார்வையில் மணல் திருட்டு அம்பலம்

இந்த வழக்கை நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தனர். அப்போது பேசிய நீதிபதிகள், "மாவட்ட ஆட்சியர், அணு ஆராய்ச்சித் துறையின் பதில் மனுவின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள மணலில் 10 விழுக்காடு கார்னைட், இலுமினைட், மோனசைட் உள்ளிட்ட அரிய கனிமங்கள் இருப்பது உறுதியாகியுள்ளன.

ஆகையால் அந்தப் பகுதியை அலுவலர்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, விதிகளின்படி கனிமங்களை அரசுக்கு உதவும் வகையில் கையாள வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஆணையர், கழுகுப்பார்வையிலான படங்கள், காணொலி பதிவுகள் உள்ளிட்டவற்றைத் தாக்கல்செய்துள்ளார்.

அதன்மூலம் தாமிரபரணி ஆற்றில் பல இடங்களில் மணல் எடுக்கப்பட்டிருப்பது தெரிகிறது. அதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்ற்றப்படுகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் அந்தஸ்திற்கு குறையாத அலுவலர் விசாரிக்க உத்தரவிடப்படுகிறது.

அப்பகுதியில் எடுக்கப்பட்ட மணல் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் உயிர், சுதந்திரத்தைப் பாதுகாப்பது அரசின் கடமை. ஆகையால் மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: Special DGP:'பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை- விசாகா குழுவின் அறிக்கையை சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details