தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கு.. தேசிய நெடுஞ்சாலை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - கயத்தாறு

கயத்தாறு, நாங்குநேரி சுங்கச்சாவடிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் தேசிய நெடுஞ்சாலை தரப்பில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 9:11 PM IST

மதுரை மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு மற்றும் நாங்குநேரி ஆகிய இடங்களில் இரண்டு சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. கயத்தாறு முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பல விதமான வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

கயத்தாறு எல்லைக்குட்பட்ட பொன்னாகுடி செங்குளம் பகுதியிலும், நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு உள்பட்ட மூன்றடைப்பு பகுதியிலும் சுமார் 3 வருடங்களுக்கும் மேலாக பாலங்கள் கட்டும் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 4 கிலோ மீட்டர் வரை கரடு முரடான ஒற்றைப் பாதையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

சுங்கச்சாவடியில் வேலை பார்க்கும் பலர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. சுங்கச்சாவடி விதிமீறல் குறித்து கேள்வி எழுப்பினால் ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்டு பிரச்னை செய்கின்றனர். சுங்கச்சாவடியில் கட்டப்பட்டுள்ள பொதுமக்களுக்கான கழிவறைகளை முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

அத்துடன் சென்டர் மீடியனில் பல இடங்களில் செடிகளை நடாமலும், செடிகளை முறையாக பராமரிக்காமலும் மோசடி செய்து வருகின்றனர். அதேபோல பல இடங்களில் போதிய மின் விளக்கு வெளிச்சமில்லாமல் நெடுஞ்சாலை முழுவதும் இருள் சூழ்ந்து பாதுகாப்பின்றி உள்ளது. சாலைகளில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன. மேலும் குடிதண்ணீர் வசதி, மருத்துவ வசதி எங்கும் செய்யப்படவில்லை.

இந்த குறைகளைச் சரி செய்யாமல் சுங்கக்கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதம். எனவே சுங்கச்சாவடிகளில் உரிய அடிப்படை வசதிகளை செய்து குறைகளை சரி செய்யும் வரை கயத்தாறு மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் செய்வதை நிறுத்தி இடைக்கால தடை விதிக்க வேண்டும், அடிப்படை வசதிகளை செய்துதர உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலைத்துறை சாலைகளை முறையாக பராமரிப்பதில்லை. சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. ஒரே இடத்தில் 14 விபத்துக்கள் நடந்துள்ளன என வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. தருமபுரியில் பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details