நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகக்கூறி 10க்கும் அதிகமான வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் ரவீந்திரன், துரைசுவாமி அமர்வு முன்பாக முறையிட்டனர்.
அப்போது, பல இடங்களில் உரிய தேவையின்றி மறு எண்ணிக்கை நடத்தப்பட்டதாகவும், இருவருக்கு வெற்ற பெற்றதற்கான சான்று அளிக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் இது போன்ற முரண்பாடுகள் உண்மையாயின், அவை தேர்தலின் நோக்கத்தை சிதைக்க செய்யும் என தெரிவித்ததோடு, மதியம் 12.30 மணிக்குள்ளாக சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தனர்.