தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஆசிரியர் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்தக்கூடாது’ - மதுரை நீதிமன்றம் உத்தரவு! - ஆசிரியர் பதவி உயர்வு

தமிழ்நாடு அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்த கோரி ஆசிரியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்கு ஆசிரியர் பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்தக்கூடாது என உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 6, 2023, 7:57 PM IST

மதுரை:ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோசப் அமல்ராஜ். இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “ஆசிரியராக பணியாற்றும் நான், டிஇடி தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளேன். நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி பணியிடத்திற்கு எனக்கு முழு தகுதி உள்ளது.

ஆனால், டிஇடி தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கு மாநில அளவிலான பொது கலந்தாய்வு நடக்கவுள்ளது. இதனால், என்னைப் போன்றோரின் வாய்ப்பு பறிபோகிறது. இது சட்ட விரோதம் எனவே, எனக்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். தண்டபானி, “தகுதியானவர்களைக் கொண்டு பதவி உயர்வுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். டிஇடி தேர்ச்சி பெறாதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கும் தகுதி குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

மனுதாரர் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்டோர் மனு தாரர் விளக்கமளிக்க வாய்ப்பளித்து 2 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை, நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமையாசிரியர் பதவிக்கு பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு நடத்தக் கூடாது” என உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:கடல் அரிப்பை தடுக்க செயற்கை பாறை: மத்திய, மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details