மதுரையில் கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடங்கியது. மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து ஜூலை இறுதி வாரத்தில் இருந்து படிப்படியாக குறைய தொடங்கியது.
மதுரையில் இன்று 63 பேருக்கு தொற்று உறுதி - Madurai Latest News
மதுரை : கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மதுரையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 51ஆக உயர்ந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 15 ஆயிரத்து 51 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 622 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சைப் பலனின்றி 369 பேர் உயிரிழந்தனர் தற்போது ஆயிரத்து 60 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மதுரையில் இன்று (செப். 9) 63 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 67 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். இன்று ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.