தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்திரை திருவிழாவை முன்னிட்டு வாக்குப்பதிவு மந்தம் - meenakshi amman temple

மதுரை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மிக மந்தமான நிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

madurai-chithirai-thiruvizha

By

Published : Apr 18, 2019, 7:31 PM IST

Updated : Apr 18, 2019, 8:06 PM IST

தமிழ்நாட்டில் இன்று 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கினை செலுத்தி வந்த நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

மதுரையில், உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 11 ஆவது நாளான தேரோட்டம் நிகழ்வு இன்று மதுரையில் நடைபெற்றது. அதனால் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருந்தபோதிலும் குறிப்பிட்ட வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். மதுரையில் மட்டும் சித்திரைத் திருவிழாவையொட்டி, இரவு 8 மணி வரை வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.

Last Updated : Apr 18, 2019, 8:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details