மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. கரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது.
சித்திரைத் திருவிழா 3ஆம் நாள்: சுவாமி, அம்மன் எழுந்தருளல் - மதுரை சித்திரை திருவிழா 3ஆம் நாள்
மதுரை: மீனாட்சி அம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர்.
சித்திரைத் திருவிழா 3ஆம் நாள்
இந்நிலையில் பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தவாறே மீனாட்சி சொக்கநாதரை தரிசித்துவருகின்றனர். சித்திரைத் திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று (ஏப். 17) மாலை சுவாமி கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளினர். இந்நிகழ்வில் சொக்கநாத வெண்பாவில் இடம்பெற்றுள்ள பாடல் இதோ...
"சன்மார்க்கஞ் செய்யுந் தபோதனரோடு என்னையும் நீ
நன்மார்க்கஞ் செய்யவருள் நாடுமோ - துன்மார்க்கஞ்
செய்கின்ற முப்புரத்தைத் தீயாக்கித் தென்மதுரை
வைகின்ற சொக்கநாதா"