மதுரை செக்காணூரணி பகுதியில் சில நாட்களுக்கு முன் கட்டுமான பணிகள் இருந்த கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், கட்டடத்தில் மின் இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஏழு பேர், இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதில் காசிநாதன், அருண் குமார், பாலு ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்ட நிலையில், மற்றவர்கள் படுகாயங்களுடன் ராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு!
மதுரை: செக்காணூரணியில் கட்டுமான பணியில் இருந்த கட்டடம் இடிந்து விழுந்ததில், உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
கட்டட
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முத்துப்பாண்டி இன்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது. மேலும் கார்த்திக், ராஜேஷ், முருகன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.