தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரிய வழக்கு - தலைமைச் செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு - Court order

மதுரை: மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாநிலங்களிலிருந்து மாநிலங்கள் செல்வதற்கும் இ-பாஸ் தேவை என்பது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai branch of the High Court has ordered the Chief Secretary of Tamil Nadu to file a reply in the e-pass cancellation case
Madurai branch of the High Court has ordered the Chief Secretary of Tamil Nadu to file a reply in the e-pass cancellation case

By

Published : Aug 20, 2020, 8:49 PM IST

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்று சமயத்தில் மாவட்டங்களிலிருந்து வேறுமாவட்டங்கள் செல்வதற்கும், மாநிலங்களிலிருந்து வேறுமாநிலங்களுக்கு செல்வதற்கும் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பித்தவர்கள் பலருக்கு இ-பாஸ் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ஏராளமானோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி மன உளைச்சலை எதிர்கொண்டுள்ளனர்.

வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை பிறப்பித்த அரசாணையின்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாநிலங்களிலிருந்து மாநிலங்கள் செல்வதற்கும் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம், இறப்பு, மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என கூறி அதற்கு உரிய சான்றுகள் இருந்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஆகையால் இவற்றை கருத்தில் கொண்டு வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை பிறப்பித்த இ-பாஸ் தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details