தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘வத்திராயிருப்பு ஒன்றிய தாலுகா அலுவகம் தாக்குதல் - ஏஎஸ்பி தலைமையில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் : வத்திராயிருப்பு ஒன்றிய தாலுகா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஏஎஸ்பி தலைமையில் விசாரித்து செய்து அறிக்கை தாக்கல் செய்ப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தவிட்டுள்ளது.

madurai bench
madurai bench

By

Published : Feb 7, 2020, 4:17 PM IST

விருதுநகர் மாவட்டம், கோட்டைப்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், "நான், கடந்த 11.01.2020 அன்று வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் தேர்தலில் போட்டியிட்டேன். எனக்கு எதிராக அதிமுகவைச் சேர்ந்த சிந்து முருகன் என்பவரும் போட்டியிட்டார். எனக்கு ஏழு வாக்குகளும், சிந்து முருகனுக்கு ஆறு வாக்குகளும் கிடைத்தன.

எனது வெற்றியை தேர்தல் அலுவலர் அறிவித்தார். ஆனால், அதிமுக-வினர் தங்கள் கட்சியைச் சேர்ந்த சிந்து முருகனைத்தான் வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் இல்லையெனில் அலுவலகத்திற்குள்ளேயே தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டல் விடுத்தனர். ஆனால், இதனை தேர்தல் அலுவலர் ஏற்க மறுத்துவிட்டார்.

அப்போது, இங்கு காவல் பணியிலிருந்த திருவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. தேர்தல் நடந்த அலுவலகத்தை திறந்துவிட்டு அதிமுகவினருக்கு சாதகமாக செயல்பட்டார்.

இதனைப் பயன்படுத்தி அலுவலகத்திற்குள் நுழைந்த ஆளுங்கட்சியினரும், சிந்து முருகன் தலைமையிலான கும்பலும், அலுவலகத்திற்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதில், இரண்டு லட்ச ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்தன. மேலும், நான் வெற்றி பெற்றதை அறிவிக்கவிடாமலும் செய்து விட்டனர்.

ஆனால், அலுவலர்களை மிரட்டி, அலுவலகப் பொருட்களை சேதமடையச் செய்த சிந்து முருகன், அவரது கும்பல் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், உயிரைக் கொடுத்தாவது நான் (கண்ணன்), யூனியன் தலைவராவதை தடுப்போம் எனக் கூறி வருகின்றனர்.

எனவே, அடுத்துவரும் தேர்தலில் உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, வத்திராயிருப்பு ஒன்றிய தாலுகா அலுவலகம் தாக்குதல் சம்பவத்தை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திர முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை விருதுநகர் மாவட்ட ஏ.எஸ்.பி. தலைமையில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : தேர்தல் அலுவலகத்தை சூறையாடிய அதிமுகவினர் - விருதுநகர் எஸ்பி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details