மதுரை: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “ராமநாதபுரம் மாவட்டதில் முஸ்டக்குறிச்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளைக்குச் சொந்தமான 2 சென்ட் நிலத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலை வைக்க அனுமதி கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
ஏழே கால் அடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலை செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அறக்கட்டளைக்குச் சொந்தமான பட்டா இடத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெண்கல சிலையை அமைக்க ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.