மதுரையை சேர்ந்த நேதாஜி என்பவர் உயர் நீதிமன்ற நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், விருதுநகர் முதல் கோயம்புத்தூர் வரை 765 kV DC உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. விருதுநகர் முதல் கோயம்புத்தூர் வரை பல லட்ச ஏக்கர் விவசாய நிலங்களில் இந்த உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கப்படவுள்ளது.
இந்த மின்கோபுரம் அதிக மின் சக்தி உள்ளதாக இருக்கிறது. இதனால் விவசாயம் பெரும் அளவில் பாதிக்கப்படும். மின்கோபுரம் அமைக்கும் பகுதிகளில் பறவைகள், கால்நடைகள் வளர்க்க இயலாது. தொடர்ந்து அப்பகுதியில் வாழும் மக்களுக்கு உடல்நிலை கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. உயர் அழுத்த மின் கோபுரம் மூலம் கொண்டு செல்லப்படும் மின்சாரம் பெரும் அளவில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பயன்படும். இதனால் பல விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அருகில் குடியிருப்புகள் கட்டவோ, குடியிருக்கவோ இயலாது.