மதுரை:மக்கள் தொடர்பு அதிகாரிகளை அரசு மக்கள் தொடர்பு அதிகாரிகள் என அழைக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். அந்த பொது நல மனுவில்,
அரசு அலுவலகங்களில் மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அரசு திட்டங்களை மக்களுக்கு தெரிவுபடுத்துகின்றனர். கடந்த 1970ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் மக்கள் தொடர்பு அதிகாரி என்ற பதவி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அதிகாரிகளை PRO என்று அழைக்கப்படுவர். தற்போது தனியார் நிறுவனங்களில் இது போன்று மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். இதனால் அரசு மக்கள் தொடர்பு அதிகாரிக்கும் தனியார் மக்கள் தொடர்பு அதிகரிக்கும் வேறுபாடுகள் இல்லாமல் ஒரு குழப்ப நிலை உருவாகிறது.