தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரையில் விழாக்கோலம்: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்! - மதுரையில் விழாக்கோலம்

மதுரை: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர்.

azhagar

By

Published : Apr 19, 2019, 7:58 AM IST

Updated : Apr 19, 2019, 9:09 AM IST

உலகப் புகழ்பெற்ற அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா இந்த ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

தங்கக் குதிரையில் கள்ளழகர்

இந்த வருடம் ஏப்ரல் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கடந்த 17ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

பக்தர்கள் தரிசனம்

அதன்பின், 18ஆம் தேதியான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்படும் என கருதப்பட்ட நிலையில், கணிசமான வாக்குகள் பதிவாகியது.

ஆற்றில் இறங்கிய அழகர்!

இந்நிலையில், இன்று அதிகாலை 6 மணியளவில் பச்சைப்பட்டாடை உடுத்தி, லட்சக்கணக்கான பக்தர்களின் தரிசனத்திற்கு இடையே தங்கக்குதிரையில் அழகர் ஆற்றில் இறங்கினார். இதனைக் காண சுமார் 10 லட்சம் பேர் கூடியதால் மதுரை மாநகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Last Updated : Apr 19, 2019, 9:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details