மேலூர் பட்டியைச் சேர்ந்த தேவமூலி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "மதுரை மாவட்டம் அழகர் மலை, திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை, சிறுமலை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, அருகிலுள்ள நிலங்களில் சட்டவிரோதமாகச் சிலர் மணல் அள்ளுகின்றனர்.
வனப்பகுதியில் மணல் அள்ளுவது குறித்து மதுரை, திண்டுக்கல் ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு - மதுரை மணல் திருட்டு வழக்கு
மதுரை: வனப்பகுதியில் மணல் அள்ளுவது குறித்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
madurai Sand thift
இதில் அரசியல் செல்வாக்கு உள்ள நபர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் இயற்கை வளம் அழிகிறது. மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. .இது குறித்து மதுரை, திண்டுக்கல் ஆட்சியர்கள், மாவட்ட வன அலுவலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.