தமிழ்நாடு

tamil nadu

தேசிய அளவிலான வாலிபால்: மதுரை அமெரிக்கன் கல்லூரி பெண்கள் அணி வெற்றி!

By

Published : Feb 28, 2023, 8:09 AM IST

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி பெண்கள் அணி 3 ஆம் இடம் பெற்றது.

Etv Bharat
Etv Bharat

மதுரை:மத்திய பிரதேச மாநிலம் கோஸ்மீ மாவட்டத்தில் தேசிய அளவிலான வாலிபால் விளையாட்டு போட்டி கடந்த பிப்ரவரி 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.

மேலும் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 3 மற்றும் 4 ஆம் இடத்திற்காக மதுரை அமெரிக்கன் கல்லூரி பெண்கள் அணி மற்றும் கேரளா சாய் அணி என இரண்டு அணியினரும் மோதிக்கொண்டனர். இந்த போட்டியில் 25:16, 25:19 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்கன் கல்லூரி அணி வெற்றி பெற்று மூன்றாம் இடம் பிடித்தது.

சிறந்த லிப்ரோ பட்டத்தை M.ஜெயப்பிரியா என்ற மாணவி

இந்த போட்டியின் இறுதியில் சிறந்த லிப்ரோ பட்டத்தை M.ஜெயப்பிரியா என்ற மாணவி பெற்றார். வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு கல்லூரியின் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன், பயிற்சியாளர் தீபன் ராஜ் ஆகியோர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர் .

இதையும் படிங்க: மலேசியா - சென்னை அரிய வகை விலங்குகள் கடத்தல் - பயணி கைது!

ABOUT THE AUTHOR

...view details