தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவைக்கு அதிகமாகவே பால் கொள்முதல்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி - Purchase of milk in excess of demand

மதுரை: தேவைக்கு அதிகமாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாக என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பாலின் கொள்முதல் அளவு அதிகரித்துள்ளதாக அமைச்சர் பேட்டி
பாலின் கொள்முதல் அளவு அதிகரித்துள்ளதாக அமைச்சர் பேட்டி

By

Published : Jul 23, 2020, 8:55 PM IST

மதுரை விமான நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அதிமுக ஒரு இறைவழிபாடு கொண்ட ஆன்மிக இயக்கம். திமுகவினரால் தான் இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதிமுகவால் ஒருபோதும் ஏற்படாது. 65 வயதான ஸ்டாலின் 25 வயது போல் தொலைக்காட்சி முன்னே நடித்துக் கொண்டிருக்கிறார்.


பிரச்னைகளை பெரிதாக்கி அரசியல் லாபம் கிடைக்காதா? என தேடுகிறார் ஸ்டாலின். பால்வளத்துறையில் பணிபுரிந்து கொண்டு தவறு செய்ய துணிந்து நிற்போர்க்கு அதிமுக அரசு உறுதுணையாக இருக்காது.

பாலின் கொள்முதல் அளவு அதிகரித்துள்ளதாக அமைச்சர் பேட்டி

விவசாயிகளிடமிருந்து பால்களை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறோம். பொதுவாக 30 லட்சம் லிட்டர் பால்தான் வரும் தற்போது ஏழை, எளிய மக்களுக்காக 40 லட்சம் லிட்டர் பால் பெறப்பட்டு கொண்டிருக்கிறது.

இதனால் பாலின் கொள்முதல் அளவு அதிகரித்துள்ளது. ஆனாலும் சில இடங்களில் பாலின் தன்மை சரியான அளவு இருந்தால் மட்டுமே ஆவினில் பெற்றுக்கொள்ளப்படும், சரியாக இல்லாத பட்சத்தில் அந்தப் பாலை வாங்க முடியாத நிலை உள்ளது.

இதனைப் பயன்படுத்திய அரசுக்கு எதிராக சிலர் பாலை கீழே ஊற்றி விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். உண்மையாக பால் தொழிலாளர்கள் கீழே கொட்ட மாட்டார்கள்.
லண்டன், நியூயார்கே நடுங்கி கொண்டிருக்க இந்தக் காலகட்டங்களில் மக்களை அதிமுக அரசு பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் இது போன்ற பேரிடர் வந்திருந்தால், ஸ்டாலின் இந்த நாட்டை விட்டே ஓடி இருப்பார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details