துபாயிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் அனைவரும் சின்ன உடைப்பு, ஆஸ்டின்பட்டி பகுதிகளில் அமைந்துள்ள தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்ட மருத்துவக் கண்காணிப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டு கரோனா கண்டறிதல் சோதனைசெய்யப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் கரோனா கண்டறிதல் சோதனை - மருத்துவ கண்காணிப்பு
மதுரை: துபாயிலிருந்து நேற்று மதுரை வந்த 143 பயணிகளுக்கு மருத்துவக் கண்காணிப்பு முடிவடைந்தது. கரோனா தொற்று இல்லாததால் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கரோனா சோதனை
ஒருநாள் முழுவதும் நான்கு மருத்துவக் குழுக்கள் மூலம் பரிசோதனை செய்ததில் 143 பயணிகளுக்கும் எந்த ஒரு தொற்று அறிகுறிகள் தென்படவில்லை என உறுதிசெய்து தற்போது அனைவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு-வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு - முகக்கவசத்துடன் திருமணம்!