மதுரை எஸ்.எஸ் காலணியிலுள்ள பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (46). இவரது மனைவி பாரதி (37), மகன் சபா (14). மனைவி பாரதி பக்கவாதம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர். மகன் சபா, மாற்றுத் திறனாளியாவார்.
என் சொத்துக்களை ஏழைகளுக்கு செலவிடுங்கள்; தற்கொலைக் கடிதத்தில் உருக்கம்! - suicide
மதுரை: கார்த்திகேயன் என்பவர் தன் சொத்துக்களை ஏழைகளுக்கு உதவக் கோரி கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பாரதி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக தனது கண் பார்வையை இழந்துவிட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை பாரதி, கடுமையான மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துவிட்டார். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன், தனது மகன் சபாவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மூவர் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட கார்த்திகேயன் கடிதம் எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், தன்னுடைய பணத்தை யாருக்கெல்லாம் வட்டிக்கு அளித்திருக்கிறார் என்றும், தனது சொத்தை ஏழைகளுக்கு உதவ பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்மூவரின் இறப்பும் எஸ்.எஸ் காலணி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.