மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரியான முத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கடந்த 2017ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு, சிகிச்சை செலவாக 69 ஆயிரத்து 249 ரூபாய் ஆகியது.
எனக்கு முத்து யுனைடெட் இந்தியா இன்யூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு செய்யபட்டுள்ளது. எனவே, மருத்துவமனையில் சிகிச்சைக்காக செலவு செய்த பணம் குறித்த விபரங்களை காப்பீடு நிறுவனத்திற்கு உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்திருந்தேன். ஆனால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், அந்த மருத்துவ காப்பீடு நிறுவனம் சிகிச்சைக்காக செலவு செய்த பணத்தை தர மறுத்ததால், 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிகிச்சைக்கு செலவு செய்த பணத்தை 2017 - 2019ஆம் ஆண்டு வரை 6 சதவிகித வட்டியுடன் 30 நாட்களுக்குள் வழங்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றி காப்பீட்டு நிறுவனம் உரிய காப்பீடு தொகையை செலுத்தவில்லை. இது குறித்து நீதிமன்றம் உரிய விசாரணை நடத்த வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.