தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல்' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!

மதுரை: டிசம்பர் மாதம் நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Local elections comments Rajendra Balaji, உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

By

Published : Oct 31, 2019, 12:37 PM IST

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டிசம்பர் மாதம் நிச்சயமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும், இதை முதலமைச்சர் பழனிசாமியும், தேர்தல் அலுவலர்களும் ஏற்கெனவே கூறியுள்ளனர். அதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய சரிவை சந்தித்தோம். தற்போது நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றது. அதேபோல், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்றார்.

Local elections comments Rajendra Balaji, உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

மேலும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட, மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எனவும் இதற்கு மாநில அரசாலான உதவிகளை முதலமைச்சர் பழனிசாமி மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக உரிய இடங்களைப் பெற்று அதிக இடங்களில் வெற்றிபெறும்

ABOUT THE AUTHOR

...view details