மதுரை மாவட்டத்தில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. திருப்பரங்குன்றம், விளாச்சேரி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வினய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் கூறியதாவது; மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மதுரை சேடப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டு வாக்குச்சாவடிகளில் உள்ள வெள்ளை நிற வாக்குசீட்டுகளில் மை அடையாளம் வைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் வாக்குப்பதிவு அரை மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.