மதுரை:தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர், ஜெயக்குமார். இவர் கொலை குற்ற வழக்கில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருந்து வந்துள்ளார். தற்போது அவருடைய நன்னடத்தை நடவடிக்கைகள் காரணமாக, கடந்த சில மாதங்களாக சிறை வளாகத்தில் தோட்ட வேலைகள் செய்ய அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (நவ.29) மதியம் சிறை வளாகத்தினுள் உள்ள தோட்ட வேலையில் ஜெயக்குமார் உள்ளிட்ட சில சிறைக் கைதிகள் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், வேலை முடிந்து மாலை சிறைக்குச் செல்லும்போது, அதில் ஜெயக்குமாரை மட்டும் காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவலறிந்த சிறைக் காவலர்கள், அவரை அங்குள்ள பகுதி முழுவதும் தேடியுள்ளனர்.