தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் அகற்றம் - கிளம்பிய புது சர்ச்சை

அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் அகற்றம் - கிளம்பிய புது சர்ச்சை
அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படம் அகற்றம் - கிளம்பிய புது சர்ச்சை

By

Published : Mar 13, 2022, 6:09 PM IST

மதுரை:தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு, சென்னையில் உள்ள அம்மா உணவகத்தின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த பொருட்கள், பெயர்ப்பலகை ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. இது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு அம்மா உணவகங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். மேலும், அம்மா உணவகங்கள் அந்தப் பெயரிலேயே எந்த மாற்றமும் இல்லாமல் செயல்படும் எனத் தெரிவித்திருந்தார்.

மீண்டும் ஜெயலலிதாவின் படம் அகற்றம்

இந்நிலையில், அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படமும் இன்னொருபுறம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படமும் ஒட்டப்பட்டன. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படம் அகற்றப்பட்டு வழக்கம்போல் செயல்படத் தொடங்கின. இந்நிலையில், இன்று மதுரையில் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டு அம்மா உணவகம் என்ற பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் அம்மா உணவகம் என்ற திட்டத்தை நிறுத்தி வைக்கவோ, பெயர் மாற்றம் செய்யும் திட்டமோ எதுவும் இல்லை எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்பட்டது புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க:வளையோசை கலகலவென... படியில் தொங்கியபடி பயணம் செய்த எம்எல்ஏ!

ABOUT THE AUTHOR

...view details