சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று உலகத்தின் மிகச் சிறந்த தலைவராக விளங்கி, கணினித் துறையில் புரட்சிக்கு வித்திட்டு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி பெருமையை போற்றுகிற வகையில் 'ராஜிவ்காந்தி கேல் ரத்னா' விருது வழங்கப்பட்டு வந்தது.
ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது
உலகமே வியக்கும் வகையில் ஆசிய விளையாட்டு போட்டியை தலைநகர் தில்லியில் 1982 இல் நடத்திய பெருமை ராஜிவ் காந்திக்கு உண்டு. 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கை அமைத்த பெருமையும் அவருக்கு உண்டு.
அந்தக் காலக்கட்டத்தில் தான் தலைநகர் தில்லியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதற்காக ராஜிவ்காந்தி அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்தப் பின்னணியில் தான் ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்பட்டு வந்தது.
பரந்த மனப்பான்மை வேண்டும்