மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே எம்எம்சி காலனியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 8ஆம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரஹ, வாஸ்து ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் சிவாச்சாரியர்கள் தலைமையில் தொடங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகம், சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க கோவில் விழாக் கமிட்டியினர் தலைமையில் நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரைக்கொண்டு விமானக்கலசங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.