மதுரை:திருப்பரங்குன்றம் தாலுகாவிலுள்ள, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த தற்காலிகப் பயணியாளர்கள் 136 பேர், கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிதிநிலையினை காரணம்காட்டி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து 136 தற்காலிகப்பணியாளர்களும் தொடர்ந்து உண்ணாவிரதம், கஞ்சி தொட்டி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலைக்கு மனு கொடுக்கும் போராட்டம், தொடர் முற்றுகைப்போராட்டம் எனப்பல்வேறு கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்தனர்.