தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அளவிலான பேச்சு போட்டி; மதுரை மாணவி முதலிடம்! - மாணவி காவியா

மதுரை: காமராஜர் பிறந்தநாளை ஒட்டி நடத்தப்பட்ட மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் மதுரையைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு வகுப்பு மாணவி காவியா முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

மாணவி காவியா

By

Published : Jul 18, 2019, 10:29 PM IST

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை ஒட்டி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மற்றும் நாடார் மகாஜன சபையின் சார்பாக பள்ளி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி காவியா, மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

முதல் பரிசு பெற்ற மாணவி காவியா

இதனை அடுத்து விருதுநகரில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் பரிசுக் கோப்பை சான்றிதழ் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும் பெற்றுக்கொண்டார். இது குறித்து மாணவி காவியா கூறுகையில், "காமராஜர் குறித்து பேசுவது எனக்கு பெருமையாக உள்ளது. எனது பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும்தான் எனக்கு அதிக நம்பிக்கை அளித்தனர்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details