மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் கேரள மையங்களில் பயின்ற மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. முறைகேட்டில் பல்கலைக்கழக அலுவலர்களும், ஊழியர்களும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கேரள மையங்களில் நடைபெற்ற முறைகேடு அண்மையில் பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீடு நடைபெற்றபோது கூடுதல் மதிப்பெண்கள் போடப்பட்டதாக பெண் விரிவுரையாளர் மீது எழுந்த புகார் ஆகியவை பற்றி விசாரிக்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தலைமையில் இன்று விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விசாரணைக்குழு பல்கலைக்கழகத்தில் இன்று கூடியது பல்கலைக்கழக பதிவாளர் வி.எஸ். வசந்தா, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தீனதயாளன், பாரிபரமேஸ்வரன், ஷகிலா ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாகப் பெண் விரிவுரையாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.