மதுரை:அதிமுக மாநாடு (AIADMK conference in Madurai) வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடக்கவிருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் கே.ராஜூ, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ்சத்யன் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (ஜூலை 33) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு, அதிமுக மாநாடு தொடர்பான ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறுகையில், "கரி கட்டையால் அதிமுக வரலாற்றை சுவரில் எழுதி கட்சியை வளர்த்தோம். தகவல் தொழில்நுட்பத்துறை எல்லாம் வளராத காலத்தில் தொண்டர்களால் சுவர்களில் எழுதி எழுதியே அதிமுக வளர்க்கப்பட்டது தான் வரலாறு.
சுவரொட்டி, பிளக்ஸ் எல்லாம் அப்போது கிடையாது. மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்காக ஸ்டிக்கர்கள் தயாரிக்கப்பட்டு அவையெல்லாம் தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வாகனங்களில் ஒட்டப்படவுள்ளன. இது தொண்டர்களால் நடத்தப்படும் மாநாடு. ஆகையால், இதில் கட்சி செலவு செய்வதற்கு ஒன்றும் கிடையாது.
இதையும் படிங்க:பாரத மாதாவுக்கு உயிர் இருந்திருந்தால்.. மணிப்பூர் விவகாரத்தை காட்டமாக விமர்சித்த சீமான்!
மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை தொண்டர்கள்தான் நடத்துகிறார்கள், ஆகையால் அதிமுகவினர் குடும்பம் குடும்பமாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மற்ற கட்சிகள் தாங்கள் நடத்தும் மாநாட்டுக்கு கூட்டத்தைக் கூட்டுகிறார்கள், அதிமுக மாநாடு தானாக சேரும் கூட்டம்.