தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் மதுரைக்கு வரவிருக்கும் ஜேபி நட்டா: பொறுப்பாளர்களுடன் ஆலோசனை - ஜேபி நட்டா பொறுப்பாளர்களுடன் ஆலோசனை

ஜனவரி 30ஆம் தேதி மதுரை வருகை தரவுள்ள பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

jp natta
ஜேபி நட்டா

By

Published : Jan 21, 2021, 9:30 PM IST

மதுரை:மாநில கட்சிகளுக்கு இணையாக தேசிய கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. அதிமுக, திமுக கட்சிகள் மாநிலம் முழுவதும் தங்களது தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ள நிலையில் தேசிய கட்சிகளும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளன.

பொங்கலன்று தமிழ்நாடு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ‘நம்ம ஊரு பொங்கல்’ நிகழ்ச்சி, துக்ளக் ஆண்டு விழாவில் மட்டும் கலந்துவிட்டு டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் மீண்டும் வரும் ஜனவரி 29ஆம் தேதி புதுச்சேரி வரவிருக்கும் அவர், தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஜனவரி 30ஆம் தேதி மதுரை வரும் பாஜக தேசிய தலைவருக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு காத்திருக்கிறது. 234 தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மறுநாள் ஜனவரி31 பல்வேறு சமுதாய தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார், அன்று மாலையே டெல்லி திரும்புகிறார்.

தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:சாரட்டு வண்டியில் வந்த சாதனை வீரர் நடராஜன்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details