மதுரை: மதுரை நகரில் பல்வேறு வணிக நிறுவனங்கள் இயங்கி வரும் முக்கிய வீதியாக தெற்கு மாசி வீதி உள்ளது. இங்கு தட்சிணாமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான ஜானகி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு (நவ.27) கடையின் உள்ளே மின் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடையின் உள்ளே இருந்து ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறி உள்ளனர். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், மதுரை திடீர்நகர், அனுப்பானடி, தல்லாகுளம், ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, விரைந்து வந்த 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக புகை அதிகளவிற்கு வெளியேறியது. இதனையடுத்து, 3 மணி நேரம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஒருவர் உயிரிழப்பு:இந்த தீ விபத்தின்போது கடையின் 3வது தளத்தில் உள்ள கழிவறையில் மோதிலால் (47) என்ற ஊழியர் சிக்கிக் கொண்டு உள்ளார். இதையறிந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கரும்புகை அதிக அளவு சூழ்ந்ததால் கொண்டு இருந்ததால் அவரை மீட்கும் பணி சவலாக மாறியுள்ளது.