மதுரை: அலங்காநல்லூர் அருகே உள்ள ஆதனூர் பகுதியை சேர்ந்த முத்தாலம்மன் கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பல்வேறு பரிசுப்பொருட்களை குவித்தது.
ஜல்லிக்கட்டு காளை இறப்பு; கிராம மக்கள் ஒன்று கூடி அஞ்சலி - madurai news
உடல் நலக்குறைவின் காரணமாக உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஜல்லிக்கட்டு காளை இறப்பு
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அந்த காளை திடீரென உயிரிழந்தது. இதனையடுத்து ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டு கிராம மக்கள் முன்னிலையில் காளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கிராம பெண்கள் கும்மியடித்து காளைக்கு இறுதி மரியாதை செலுத்தி வழிபட்டனர்.
இதையும் படிங்க: மதுரையில் ரயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு