தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது என்ன அத்தியாவசியப் பொருளா? - அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் - high court news

மது என்ன மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருளா என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

tasmac_shop
tasmac_shop

By

Published : Mar 23, 2023, 10:33 PM IST

மதுரை:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா P.வாகைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்ற கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஞானதாஸ், தமது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

அதில், "விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா P.வாகைகுளம் கிராமத்தில் பட்டியல் சமுகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். P.வாகைகுளம் கிராமத்தைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு பல்வேறு வகுப்பினை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேலையூர் கிராம நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த மதுபான கடை: 11910 P.வாகைகுளம் கிராமத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இதனால், P.வாகைகுளம் கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சிறுவர்கள், பெண்கள் சென்று வரக்கூடிய பாதையாகவும் உள்ளது. இந்த மதுபானக் கடையை அகற்றக்கோரி பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
மேலும் மதுபான கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்திய போது காவல்துறையினர் பொதுமக்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா P.வாகைகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மதுபானக் கடை 11910வை அகற்ற உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி அமர்வு விசாரித்தது டாஸ்மாக் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், மதுபானக்கடை உரிய அனுமதி பெற்று செயல்படுகிறது. மேலும் 20 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த மதுபானக்கடையும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், 20 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒரு மதுபான கடை தான் உள்ளது என பதில் கூற என்ன காரணம் என கேள்வி எழுப்பினர். மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியம் தேவைப்படும் பொருளா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

வழக்கு குறித்து உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் டாஸ்மார்க் மேலாளர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2 ஆண்டு சிறை.. எம்.பி. பதவிக்கு ஆபத்தா?

ABOUT THE AUTHOR

...view details