மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள வடகரை கன்மாய் உடைந்ததால் இதன் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. பேட்டை அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் உள்ள ரயில் பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் ரயில்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில் எச்சரிக்கையுடன் இயக்கப்படுகின்றன.
சோழவந்தான் அருகே தண்டவாளத்தில் வெள்ளம்... ஊர்ந்து செல்லும் ரயில்கள்...
சோழவந்தான் அருகே கண்மாய் உடைந்து தண்டவாளத்தில் நீர் சூழ்ந்ததால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. இதனால் தாமதம் ஏற்படுவதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பேட்டை கிராமத்தில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்தது. கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ரயில்வே கேட் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீர் கிராமத்தை பாதிக்காமல் வேறு பகுதியில் திருப்பி விடப்பட்டுள்ளது. கன்மாய் உடைப்பை சரி செய்ய மாநில அரசு அதிகாரிகள் முயன்று கொண்டிருக்கிறார்கள். நிலைமை சீரடையும் வரை பேட்டை ரயில்வே கேட் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:கோவையில் கார் வெடித்த சம்பவம் - இறந்தவர் யார் என்று துப்புகிடைத்தது