மதுரை: உசிலம்பட்டியை சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி குருசாமி தாத்தா காந்தி பிறந்த நாளான இன்று(அக்.1) காலமானார்.
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் குருசாமி தாத்தா. காந்தியடிகளின் மீது கொண்ட பற்றால் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற இவர், 1942-ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு சுதந்திர போராட்டத்தின் போது உசிலம்பட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
சுதந்திரம் பெற்ற பின்னும் காந்தியடிகளின் கொள்கைகளை கிராமத்தில் உள்ள இளைஞர், பள்ளி மாணவ மாணவிகளிடையே விதைத்து வந்த இவர் கிராமத்து காந்தியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.