மதுரை:இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில், "மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க வடமாநிலங்கள் மற்றும் துறைமுகங்களிலிருந்து ரயில் மூலம் நிலக்கரி கொண்டுவரப்படுகிறது. இந்த நிலக்கரி போக்குவரத்து கடந்த மே மாதம் மட்டும் 26 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு மே மாதத்தைக் காட்டிலும் இந்தாண்டு 0.263 மில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரி ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் தெற்கு ரயில்வே முதல் முறையாக மே மாதத்தில் மட்டும் 3.621 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இதுவும் கடந்தாண்டை காட்டிலும் 49 சதவீதம் அதிகமாகும்.