தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியம் கூறியது என்ன? - மதுரை நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியம் இன்று (செப்.14) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் வழக்கில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 10:03 PM IST

மதுரை:தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்கள் தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல் துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல் துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இதனையடுத்து தந்தை-மகன் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் முதற்கட்டமாக 2027பக்கம் குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டதாக கூடுதலாக 400 பக்கம் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் 104 சாட்சிகளில் இதுவரை 60க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் சாட்சிய விசாரணை நடத்தப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழரசி முன்பாக விசாரணை நடைபெற்றது.

அப்போது சாத்தான்குளம் பென்னிக்ஸின் பக்கத்து கடைக்காரர் பிரபு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்தார். அதில் இவருடைய கடையின் சிசிடிவி பதிவுகள் மூலம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை சாத்தான்குளம் காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

அவரிடம் கைது செய்யப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். அப்போது சாட்சியம் அளித்த பக்கத்துக் கடைக்காரர் ஜெயராஜும் பென்னிக்ஸும் காவல் துறையினர் அழைத்ததையடுத்து எந்தவித பிரச்னையும் செய்யாமல் காவல் நிலையம் சென்றதை உறுதிப்படுத்தினார்.

சாத்தான்குளம் காவல் துறையினர் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்சும் கடை முன்பு உருண்டு பிரண்டு பிரச்னை செய்தார்கள் என்று கூறி வந்த நிலையில், இவர் அளித்த சாட்சியம் இந்த வழக்கில் முக்கியமாக கருதப்படுகிறது. மேலும், அடுத்த கட்டமாக இந்த வழக்கை தொடக்கத்தில் விசாரித்த கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் வரும் 20ஆம் தேதி விசாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:வளர்ப்பு நாய் இறந்த துக்கம் தாளாமல் உரிமையாளர் தற்கொலை முயற்சி.. அரக்கோணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details