தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ - நடிகர் விஜய்யின் அரசியல் வருகை

"பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள், எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்" என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

By

Published : May 12, 2023, 9:42 PM IST

பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”அமைச்சர் பி.டி.ஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு 30,000 கோடி ரூபாய் ஆடியோ தான் காரணம். தவளை தன் வாயால் கெடும் என்பது போல பி.டி.ஆர் கெட்டுள்ளார்.

இப்போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், ஆடியோ விவகாரம் உண்மையாகி விடும் என சாதாரண ஒரு இலாகாவை கொடுத்து உள்ளனர். நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பை ஏற்றுள்ள தங்கம் தென்னரசு மிகச் சிறந்த நிர்வாகி. எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்கக்கூடியவர். இன்று அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களிலேயே, பிறரை தரக்குறைவாக பேசாதவர். நிதித்துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்” என்று கூறினார்.

ஓ.பி.எஸ். இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என்ற வைத்திலிங்கம் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, ”எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித் தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம்" என்றார்.

மேலும் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, "எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான். பாஜகவும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்" என்றார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு, "ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம். கமல் கூட மக்களுக்கு நல்லது செய்ய போவதாகச் சொல்லி தான் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இப்போது நீதியும், மய்யமும் எங்கே போனது எனத் தெரியவில்லை. எனவே, விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும்.

அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி உள்ளார்.

இதையும் படிங்க:போலி வீடியோ விவகாரம் - மணீஷ் காஸ்யப்பை தேசிய பாதுகாப்புச் சட்டப்படி சிறையில் அடைக்க ஆளுநர் ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details