மதுரை கூடல் நகர் பகுதியில் பிரபல ஒப்பந்ததாரர் குணசேகரன் என்பவர் வீட்டில் கடந்த வாரம் 170 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை நேற்று காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இந்நிலையில் கொள்ளைபோனதாகப் புகாரளித்த குணசேகரன் வீட்டை காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது சட்டத்துக்குப் புறம்பாக விதிகளை மீறி 6 துப்பாக்கிகள், 100 தோட்டாக்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து குணசேகரனைக் கைதுசெய்த காவல் துறையினர், அவர் மீது ஆயுதங்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.
வீட்டில் சட்டவிரோதமாகப் பதுக்கிவைத்திருந்த 6 துப்பாக்கிகள் கொள்ளை சம்பவத்திற்காக வழக்குப்பதிவு செய்தவர் வீட்டிலேயே துப்பாக்கி, தோட்டாக்களைக் காவல் துறை பறிமுதல்செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உதவி ஆய்வாளர் எழுத்து தேர்வில் 'பிட்' அடித்து பிடிபட்ட காவலர்