திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் நிறுவனர் நடிகர் கமல்ஹாசன் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது மத்தியில் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. பெண்கள் குடிநீருக்கான அலைவதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இதற்கு நடவடிக்கை எடுக்காமல், நான் பேசிய ஒன்றை தவறாக இட்டுக்கட்டி என்மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள்.
நான் சொன்ன தகவலில் எந்தவித தவறும் இல்லை. அது சரித்திர பூர்வமான உண்மை. உண்மையை யாராலும் மாற்ற இயலாது. சாதி, மதத்திற்கு ஆதரவு தெரிவித்தது கிடையாது. நான் சொன்ன விஷயம், ஊடகங்களால் திரித்துக் கூறப்பட்டு விட்டது. நான் செய்தது குற்றம் எனில், ஊடகங்கள் அதனை திரும்பத் திரும்ப செய்திருக்கின்றன. என் மீது சாட்டப்பட்ட அதே குற்றம் ஊடக நண்பர்களுக்கும் பொருந்தும்.