தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிக்குடித்தனம் செல்ல அழைத்த மனைவியை கொலைசெய்த கணவன் - தனிக்குடித்தனம் அழைத்த மனைவியை கொலை செய்த கணவன்

மதுரையில் தனிக்குடித்தனம் செல்ல அழைத்த மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தானே முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மதுரை
மதுரை

By

Published : Dec 31, 2021, 5:55 PM IST

மதுரை:நியூ எல்லீஸ்நகர் ஆர்.சி. சர்ச் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாகவேல், பெயிண்டராக வேலை பார்த்துவருகிறார். நாகவேல் மூன்று மாதங்களுக்கு முன் சுதா என்பவரைத் திருமணம் செய்துள்ளார். திருமணம் முடிந்து சுதா, நாகவேல் குடும்பத்தினருடன் தாய், தம்பி ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கணவன் - மனைவி இடையே தனிக்குடித்தனம் செல்வது குறித்து அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்றிரவும் (டிசம்பர் 30) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் நாகவேல் ஆத்திரத்தில் மனைவி சுதாவை கொலைசெய்துள்ளார்.

இதனையடுத்து மனைவியை கொலை செய்துவிட்டதாகக் கூறி எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் நாகவேல் சரணடைந்தார். காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமான மூன்று மாதத்தில் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வீட்டின் வெளியே இருந்த R15 பைக் மாயம் - சிசிடிவி மூலம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details